கொள்ளை போனதாக நாடகம்: மனைவியின் நகைகளை திருடி புல்லட் பைக் வாங்கிய கணவர்..!
சென்னையில் மனைவியின் நகைகளை திருடி விற்று விட்டு, கொள்ளை போனதாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
எழும்பூர்:
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த அப்துல் ரசீத் (வயது 27), ஏர்கண்டிஷன் மெஷின் பழுது பார்க்கும்,மெக்கானிக்காக வேலை செய்கிறார். இவர் தனது மனைவியின் 17 பவுன் நகைகள் கொள்ளை போய் விட்டதாக எழும்பூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் புகார் கொடுத்த அப்துல் ரசீத்தே, அவரது மனைவியின் நகைகளை திருடி விற்று, அதில் புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்கி இருப்பது தெரிய வந்தது. மேலும் அவர் மனைவியின் நகைகள் கொள்ளை போய் விட்டதாக நாடகம் ஆடியதும் அம்பலம் ஆனது.
இதனால் போலீஸ் நடவடிக்கை, புகார் கொடுத்த அப்துல் ரசீத் மீதே பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது உறவினரும் கைதானார்.