கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் குத்திய கணவர்
சென்னை அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த மணப்பாக்கம் தர்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யபிரியா (வயது 23). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் உத்திரகுமாரை (27) விட்டு பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் தனது குழந்தையை பார்ப்பதற்காக உத்திரகுமார், மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த உத்திரகுமார், மனைவி சத்யபிரியாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த சத்யபிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்திரகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.