மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் அய்யனார்நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது50). இவர் தனது 2-வது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். சம்பவத்தன்று தர்மராஜ் வீட்டில் வைத்து விஷத்தை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து முதல் மனைவியின் மகன் வெயிலுமுத்து என்பவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்தபோது தர்மராஜ் வாந்தி எடுத்தால் சரியாகிவிடும் என்று கூறி வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவர் மயக்க நிலையை அடைந்ததால் வெயிலு முத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், தர்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.