மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

தூத்துக்குடியில் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-29 12:51 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 47). இவருக்கும், இவரது மனைவி மைதிலி (42) என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன் தனது மனைவியை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்