பெண்ணை குத்திக்கொன்ற கணவர் கைது

பெண்ணை குத்திக்கொன்ற கணவர் கைது

Update: 2023-04-19 18:45 GMT

சூலூர்

சூலூர் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

காதல் திருமணம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் நிவேதா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். தற்போது இவர்கள் சூலூரை அடுத்த பள்ளபாளையத்தில் கோவிந்தசாமி தேவர் வீதியில் வசித்து வருகின்றனர். கணேசன் மனைவி நிவேதா அந்த பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலைக்கு சென்று வந்த போது அங்கு பணி புரிந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த கணேசன் தனது மனைவி நிவேதாவிடம் அந்த நபருடனான பழக்கத்தை விட்டு விடும்படி கூறி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

குத்திக்கொலை

இந்த நிலையில் நேற்று மதியம்வீட்டிற்கு வந்த கணேசன் தனது மாமியாரிடம் குழந்தைகளுக்கு பழச்சாறு வாங்கி கொடுக்குமாறு கூறி வெளியே அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் சென்றதும் குடிபோதையில் இருந்த கணேசன் மனைவி நிவேதாவை கத்தியால் வலது பக்க கழுத்தில் இரண்டு தடவை குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்த நிவேதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த சூலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திர பிரசாத், வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் கள்ளகாதலை கைவிட மறுத்த மனைவியை குத்திக் கொன்றதாக கணேசன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்