மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
நெல்லை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே கங்கைகொண்டான் ராஜபதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 32). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஆனந்தி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கடேஷ் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 17.4.2022 அன்று ஆனந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நெல்லை ஊரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெபராஜ் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் ஆனந்தியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று கைது செய்தனர்.