திருமணமான ஒரே மாதத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை... துக்கத்தில் கணவன் விஷம் அருந்தி தற்கொலை

தண்டையார்பேட்டை அருகே திருமணமான ஒரே மாதத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2022-10-21 13:01 GMT

ராயபுரம்:

சென்னை, தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 26), சிலிண்டர் போடும் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி இவருடைய தாய் மாமன் மகள் எர்ணாவூரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி (வயது 21) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தேனிலவுக்கு சென்று விட்டு கடந்த 14 ஆம் தேதி வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து 15 ஆம் தேதி சாமுண்டீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு சாண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை குறித்து சாமுண்டீஸ்வரி பெற்றோர் புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதனால் தற்கொலை என்று வழக்கு முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் கீழே மருந்து குடித்து ஜெய்சங்கர் கீழே விழுந்து கிடந்தார். அக்கம் பக்கத்தின மீட்டு அரசு புறநகர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் ஜெய்சங்கர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணம் ஆகி ஒரே மாதத்தில் மனைவி மற்றும் கணவர் தற்கொலை செய்துள்ளனர்.

இச்சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரும் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம்? என்பது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்