பெண்ணை கொன்ற கணவன்-மனைவி கைது

பெண்ணை கொன்ற கணவன்-மனைவி கைது

Update: 2023-05-04 20:12 GMT

நாச்சியார்கோவில் அருகே பெண்ணை கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

வாய்த்தகராறு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலவிசலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 50). இவரது மனைவி லதா(45). நேற்று முன்தினம் மதியம் வெங்கடேசனுக்கும், அதே ஊரைச்சேர்ந்த சந்திரன் என்பவருக்கும் செங்கல் அறுப்பது சம்பந்தமாக பணம் பாக்கி இருந்ததால் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறை பார்த்த வெங்கடேசனின் அண்ணன் மகன் திவாகர், இதுகுறித்து எதுவும் கேட்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

கீழே தள்ளிவிட்டு கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன், லதா ஆகியோர் திவாகர் வீட்டிற்கு சென்று அவரை சத்தம் போட்டு உள்ளனர். பின்னர் திவாகரை கணவன்-மனைவி இருவரும் சேர்த்து தாக்கி உள்ளனர். இதனை பார்த்த திவாகரின் தாயார் வாணி(42) என்பவர் ஏன் தனது மகனை அடிக்கிறீ்ர்கள்? என கேட்டுள்ளார்.

உடனே கணவன்-மனைவி இருவரும் சேர்த்து வாணியை கீழே தள்ளி விட்டனர். இதில் தடுமாறி கீழே விழுந்த வாணி பேச்சுமூச்சு இ்ல்லாமல் கிடந்தார். உடனடியாக அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வாணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசில் திவாகர் புகார் செய்தார். அதன்ே்பரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், லதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்