பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி கைது
பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்- மனைவி கைது செய்யப்பட்டனர்.
சேலம் எருமாபாளையம் பகுதியில் ஒரு வீட்டில் இளம்பெண்களை சிலர் விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, அந்த வீட்டில் விபசாரம் நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், வீடு வாடகைக்கு எடுத்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபட்ட முகமது ரபிக் (40), அவரது மனைவி முகம்மதா (33) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.