ஆதி திராவிட நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா

ஓட்டப்பிடாரம் அருகே ஆதி திராவிட நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நடந்தது.

Update: 2023-01-28 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நடந்தது. விழாவுக்கு ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், குறுக்குச்சாலை பஞ்சாயத்து தலைவர் முனியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் தில்லைபாண்டி வரவேற்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கிராம பொதுமக்களுக்கு அரசு சார்பில் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் விதவைகள் உதவித்தொகை கேட்டு பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆய்வாளர் அன்பழகன், ஊராட்சி செயலாளர் ஜெகநாதன், அரசு மாணவ-மாணவியர் விடுதி காப்பாளர்கள் சித்ராதேவி, பாஸ்கர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்