ஓவேலியில் மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு
ஓவேலியில் மனித- வனவிலங்கு மோதல் தடுப்பு விழிப்புணர்வு
கூடலூர்
கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்கார் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா மேற்பார்வையில் ஓவேலி வனத்துறை சார்பில் மனித- வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்தி நகர், பார்வுட், கிளன்வன்ஸ், சீபுரம், நாயக்கன்பாடி, குறும்பர்பாடி, அய்யப்பமட்டம், எல்லமலை ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. அப்போது யானைகள் மனித மோதலை பற்றியும், உலக சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பொம்மை கலைக்குழுவினரின் வன விலங்கு மனித மோதலை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது வனத்தை பாதுகாப்போம். சுற்றுச்சூழலை மேம்படுத்துவோம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள், யானை கண்காணிப்பு குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், ஜீப் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.