21 வழக்குகள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை
21 வழக்குகள் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை
நாகர்கோவில்:
மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் நீதிபதி எஸ்.பாஸ்கரன் அறிவுறுத்தலின் படி பல்வேறு மாவட்டங்களில் தற்போது நேரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மாநில மனித உரிமை ஆணையம் சார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை மையம் அமைக்கப்பட்டது. மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றும் போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகினர். அந்த வகையில் 21 வழக்குகள் குறித்து நேரடி விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த வழக்குகள் அனைத்தும் வருகிற ஆகஸ்டு மாதம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போது வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.