சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

Update: 2022-10-11 20:57 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாரதி தலைமையில் நகர்மன்ற தலைவர் சுமதிசிவகுமார் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் காந்தி சிலை முன்பிருந்து கடைவீதி வரை கைகளை கோர்த்து நின்றனர். இதில் கட்சியின் தொகுதி செயலாளர் இலக்கியதாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமநாதன் மற்றும் ம.தி.மு.க., திராவிடர் கழகம், காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்