சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைந்தது.

Update: 2022-10-11 19:45 GMT

மனித சங்கி போராட்டம்

சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் சுமார் 500 இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல்லில் நடந்த மனிதசங்கிலி போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் தலைமை தாங்கினார்.

இதில் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் சித்திக், ம.தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் பழனிசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் கொழந்தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இதையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து நகர காங்கிரஸ் அலுவலகம் வரை கைகோர்த்து நின்ற அரசியல் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம்

ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நடந்த போராட்டத்துக்கு ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் வீர ஆதவன் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் பாச்சல் சீனிவாசன், நகர காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி, ம.தி.மு.க. நகர செயலாளர் ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மணிமாறன், மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் நிசார் பாஷா, தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி மாவட்ட தலைவர் முருகேசன், ராசிபுரம் நகர திராவிடர் விடுதலை கழக செயலாளர் பிடல் சேகுவாரா, தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் செல்வவேந்திரன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணை செயலாளர் நசீர் உள்பட கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையில் இருந்து வேலூர் ரோடு வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினர்். விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அசோக், நகர செயலாளர் சக்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட குழு அசோகன், ஒன்றிய குழு மற்றும் எலச்சிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில குழு உறுப்பினர் மணிவேல், ஜெயராமன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெகநாதன், மறுமலர்ச்சி தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கே.கே.கணேசன், மாவட்ட துணை செயலாளர் செல்லமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் பெரிய தேர் நிலையம் அருகில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கூட்டணி கட்சியுடன் இணைந்து நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இதற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சேந்தமங்கலம் தொகுதி செயலாளர் பண ரோசா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் இன்பரசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட கலந்துகொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் காங்கிரஸ், இந்தி கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூர்

பரமத்தி வேலூரில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி, ம.தி.மு.க. மாநில சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் ரங்கசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பரமத்தி தொகுதி துணை செயலாளர் ஜெகதீசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஆபித், கிறிஸ்தவ நல ஐக்கிய பேரவையை சேர்ந்த பாஸ்கர் பிரபாகர் மற்றும் சமூக நல்லிணக்க கூட்டமைப்பை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் சந்திரன் நன்றி கூறினார். காமராஜர் சிலையில் இருந்து பரமத்திவேலூர் பஸ் நிலையம் வரை 200-க்கும் மேற்பட்டோர் மனித ‌சங்கிலியாக கைகோர்த்து நின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்