சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-25 18:45 GMT

மோகனூர்

மோகனூர் அடுத்த வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கு தேவையான நிலங்கள் அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 'விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், சிப்காட் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது' என பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து சிப்காட் எதிர்ப்புக்குழு அமைத்து, தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கைவிடக்கோரி, சிப்காட் எதிர்ப்பு குழு சார்பில், மனித சங்கிலி போராட்டம் வளையப்பட்டியில் நேற்று நடந்தது. விவசாய முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். சிப்காட் எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், பழனிவேலு, கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், கொ.ம.தே.க. ஒன்றிய தலைவர் முருகேசன் ஆகியோர் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை கைவிட வலியுறுத்தி பேசினர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் விவசாய முன்னேற்ற கழக நிர்வாகிகள் தண்டபாணி, ராமசாமி, சிப்காட் எதிர்ப்பு குழுவினர், பல்வேறு அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்