ஆபத்து காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்வது? பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம்

ஆபத்து காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்வது? என பொதுமக்களுக்கு தீயணைப்புத்துறையினர் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

Update: 2023-09-03 18:45 GMT

விழுப்புரம் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு ஆபத்து காலங்களில் எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் செயல்முறை விளக்க பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் அருகே மரகதபுரம் பகுதியில் ஓடும் தென்பெண்ணையாற்றில் நடந்த இந்நிகழ்வில் மழை மற்றும் வெள்ளம், இயற்கை சீற்றங்களில் பேரிடர் ஏற்படாத வண்ணம் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பொருட்களை கொண்டு தன்னைத்தானே எப்படி காப்பாற்றிக்கொள்வது, பிறரையும் எப்படி காப்பாற்றுவது, பேரிடரை எவ்வாறு தவிர்ப்பது என்பது பற்றி தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் சிவசங்கரன் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர்கள் ஷாஜகான், பிரபு மற்றும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்