நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி? - பள்ளி கல்வித்துறை

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-09-12 08:16 GMT

சென்னை,

நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வில் கடந்த 2021-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 8,061 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில் 1,957 பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இந்த ஆண்டு (2022) 17,972 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். இதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இது 35 சதவீத தேர்ச்சியாகும். சென்னையில் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் 100 சதவீத தேர்ச்சியாக தேர்வு எழுதிய 131 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதே போல் விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரை மாவட்டங்களிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரும்பாலான மாவட்டங்களில் 20 சதவீதம் முதல் 25 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்