கருணாநிதி உயர் சிறப்பு ஆஸ்பத்திரியை விரைவில் கட்டி முடித்தது எப்படி? அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கருணாநிதி நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரி விரைவில் கட்டி முடிக்கப்பட்டது எப்படி? என்பது அமைச்சர் எ.வ.வேலு ருசிகர தகவல் தெரிவித்தார்.

Update: 2023-06-15 23:54 GMT

சென்னை,

இந்த கட்டிடத்தை ரூ.230 கோடியில் கட்ட வேண்டும் என்ற கோப்பு எனக்கு வருகிறது. நான் 2 நாட்கள் இந்த வரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.

'முதல்-அமைச்சர் இந்த கட்டிடத்தை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கு நான், குறைந்தது 24 மாதங்கள் கட்டினால்தான் தரமாக இருக்கும் என்று சொன்னேன்.

உடனே முதல்-அமைச்சர் இந்த திட்டத்தை 3 ஆக பிரித்து, கட்டிட வரைபடங்களை 3 ஆக பிரித்து 3 ஒப்பந்ததாரர்களிடம் கொடுத்தால் விரைந்து முடிக்க முடியும் என்ற உத்தியை சொல்லி கொடுத்தார். இந்த கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டதற்கான பெருமை எங்கள் துறையை விட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைதான் சேரும். இந்த கட்டுமான பணிகளை பல முறை அவரே நேரில் ஆய்வு செய்தார். அவர் சொன்ன கருத்துகள் அடிப்படையில் மாற்றங்களை நாங்கள் செய்தோம்.

தூங்காத முதல்-அமைச்சர்

கடந்த 3 தினங்களுக்கு முன்பு இரவு 11 மணியளவில் முதல்-அமைச்சர் எனக்கு போன் செய்து, 'தூங்கி விட்டீர்களா?' என்று கேட்டார். அவர் தூங்குவது இல்லை. இந்தியாவில் தூங்காத ஒரு முதல்-அமைச்சர் இருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.

போன் செய்த அந்த நேரத்தில் திருக்குறளில் 949-வது குறளை எடுத்து படியுங்கள் சென்று சொன்னார். திருக்குறள் தொடர்பாக கருணாநிதி எழுதிய அந்த உரையை நான் எப்போதும் படுக்கை அறையில் வைத்திருப்பேன். ஏனென்றால் நான் படிக்கிற காலத்திலே திருக்குறள் மீது எனக்கு ஈர்ப்பு சக்தி அதிகம்.

நான் அந்த குறளை எடுத்து படித்தேன். 'உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்' என்று அந்த குறள் இருந்தது. இதுபற்றி நோயாளியின் வயது, நோயின் தன்மை, மருத்துவம் செய்வதற்குரிய நேரம் ஆகியவற்றை கருதி மருத்துவம் செய்தால்தான் அது சிறப்பான மருத்துவம் என்று கருணாநிதி உரை எழுதி இருக்கிறார்.

கருணாநிதி திருவுருவ சிலையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் இதனை பொறிக்க வேண்டும் என்று சொன்னார். உடனே மறுநாளே சிற்பியை வரவழைத்து இதை செய்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்