ரூ.11¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகள்
ஆம்பூர் அருகே ரூ.11¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.3 கோடியே 80 லட்சத்தில் 76 வீடுகள் மற்றும் சின்னப்பள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடியில் 160 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல், உதவி பொறியாளர் பூபாலன், பணி மேற்பார்வையாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.