வீடு புகுந்து 3½ பவுன் நகை திருட்டு

வீடு புகுந்து 3½ பவுன் நகை திருட்டுபோனது.

Update: 2023-06-15 20:30 GMT

துறையூர்:

துறையூரை அடுத்த காட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள பெரிய காட்டுக்குளம் பகுதியில் வசித்து வருபவர் குமார்(வயது 22). இவர் திருச்சியை அடுத்த துவாக்குடியில் வெல்டராக வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் அவரும், அவரது மனைவியும் தூங்க சென்று விட்டனர்.

வீட்டின் முன் பகுதியில் குமாரின் தாய் திண்ணையில் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் வைத்திருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த சங்கிலி மற்றும் மோதிரம் உள்பட 3½ பவுன் நகைகளை திருடி சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த குமார், பீரோவில் பார்த்தபோது, அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து குமார் அளித்த புகாரின்ேபரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்