தீயில் எரிந்து கூரை வீடு சேதம்
கீழ்வேளூர் அருகே தீயில் எரிந்து கூரை வீடு சேதம் அடைந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே இலுப்பூர் ஊராட்சி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது33). கூலி தொழிலாளி. நேற்று காலை மலர்மன்னன் குடும்பத்தினர் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது தீடீரென கூரையில் தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் வீடு முழுவதும் தீபரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில் உள்ளிட்ட தளவாட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், கீழ்வேளூர் வருவாய் ஆய்வாளர் கார்த்தி, கிராம நிர்வாக அலுவலர் நந்தேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்க வந்து தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தமிழக அரசின் நிவாரண உதவிகளை வழங்கினர். தீவிபத்துக்கான காரணம் குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.