மழைக்கு வீடு இடிந்து சேதம்

மழைக்கு வீடு இடிந்து சேதம்

Update: 2022-10-21 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை 5 மணிக்கு கோத்தகிரி குமரன் காலனி பகுதியில் உள்ள வாசுகி என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான 4,100 ரூபாயை உடனடியாக வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்