திருவெண்ணெய்நல்லூர் அருகேவீடு புகுந்து நகை, பணம் திருட்டு

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடு போனது.

Update: 2023-05-06 18:45 GMT


திருவெண்ணைய்நல்லூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பொய்கை அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் சுப்பிரமணி (வயது 60). இவரது மனைவி சாந்தாமணி. மகள் சத்யா. சுப்பிரமணியனின் உறவினர் இல்ல காதணி விழா விழுப்புரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க அவர்கள் குடும்பத்துடன் சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது, வீட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கிருந்த பீரோ கதவு திறந்த நிலையில், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் திருடு போயிருந்தது. மர்ம நபர்கள் வீடு புகுந்து, நகை பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்