வீடு புகுந்து நகை பொருட்கள் திருட்டு
திருக்கோவிலூர் அருகே வீடு புகுந்து நகை, பொருட்கள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் சத்தியகண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வள்ளியம்மாள்(வயது 55). இவர் சம்பவத்தன்று வீ்ட்டை பூட்டி விட்டு குடு்ம்பத்துடன் வேலூரில் உள்ள தனது பேரன் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலை வள்ளியம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து பக்கத்து வீட்டை சேர்ந்த அருணாசலம் என்பவர் அவருக்கு தகவல் கொடுத்தார். உடனே வேலூரில் இருந்து புறப்பட்டு ஊர் திரும்பிய வள்ளியம்மாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த 2 பீரோவின் கதவுகளும் திறந்து கிடந்தன. மேலும் அதில் இருந்த 2 மடிக்கணினிகள், 2 ஐ பேட், அரை பவுன் கம்மல், 2 கை கடிகாரம், 4 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வள்ளியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகை, பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.