வீடு புகுந்து 7 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 7 பவுன் நகை திருடப்பட்டது.
மணப்பாறையை அடுத்த ஆணையூரை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 26). இவர் நேற்று வீட்டின் கதவில் தாழ்பாள் மட்டும் போட்டு விட்டு அருகில் உள்ள காட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வந்து பார்த்த போது கதவு திறந்து இருந்ததுடன் பீரோ திறந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகை மற்றும் 3 ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.3 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.