வீடு புகுந்து 1 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

வீடு புகுந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.

Update: 2022-11-04 18:50 GMT

சிவகாசி,

சிவகாசி என்.பி.எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் பசை பாக்கெட் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் வீட்டின் அனைத்து பகுதியையும் சுற்றி பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை காணவில்லை. மேலும் பூஜை அறையில் வைத்திருந்த ரூ.7,300 மதிப்புள்ள ஜெர்மனி நாட்டின் பணத்தையும் காணவில்லை. இதுகுறித்து அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்