காங்கயம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக 10 வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது.
காங்கயம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காங்கயத்தில் 154 மில்லி மீட்டர் பதிவானது. இந்த மழையால் காங்கயம் அருகே வீரசோழபுரம், ரெட்டிவலசு முகவரியை சேர்ந்த கமலாத்தாள். நத்தக்காடையூர் அருகே சிவசக்திபுரம் முகவரியை சேர்ந்த வீராள். அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆறுச்சாமி, லலிதா. சிவன்மலை பகுதியை சேர்ந்த வள்ளியம்மாள். சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பம்மாள்.
வடசின்னாரிபாளையம் கிராமம் அய்யாக்குட்டி வலசு பகுதியை சேர்ந்த சின்னச்சாமி, வெங்கிடசாமி. கணபதிபாளையம் கிராமம், ஓட்டப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் ஆகியோர்களின் வீட்டின் மேற்க்கூரை மற்றும் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால், குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீடு இடிந்து விழுந்த சம்பவம் குறித்து காங்கயம் வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
---