தொண்டியில் நேற்றுமுன்தினம் பெய்த கனமழையில் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் உள்ள சித்திக் அலி (வயது 56) என்பவருடைய வீடு முழுமையாக இடிந்து சேதமடைந்தது. இதில் எவ்வித உயிர் சேதம் ஏற்படவில்லை. ஆங்காங்கே சில மரங்கள் சாய்ந்து விழுந்து உள்ளன. தகவல் அறிந்த திருவாடானை தாசில்தார் தமிழ்செல்வி, தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் ஆகியோர் சம்பவ நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து வீடு இடிந்து பாதிக்கப்பட்ட சித்திக் அலிக்கு அரசின் நிவாரண உதவித்தொகை ரூ. 5 ஆயிரம், வேட்டி-சேலை, அரிசி, மண்எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்களை ழங்கி ஆறுதல் கூறினர். அப்போது பேரூராட்சி துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன், கவுன்சிலர் செய்யது அபுதாஹிர், செயல் அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர் ராதா ஆகியோர் உடன் இருந்தனர்.