ரெயில் மோதி ஓட்டல் தொழிலாளி சாவு

திருமங்கலம் அருகே ரெயில் மோதி ஓட்டல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-07 19:50 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் கற்பக நகரை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 51). ஓட்டல் தொழிலாளி. நேற்று மாலை திருமங்கலம் விமான நிலையம் ரோடு அருகே குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இதற்கான ரெயில்வே கிராசிங் மூடப்பட்டிருந்தது. இதை கவனிக்காத கிருஷ்ணமூர்த்தி ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் ரெயில் வருவது குறித்து சத்தம் போட்டனர்.. இதை கவனிக்காமல் அவர் ரெயில்வே கேட்டை கடக்க முயற்சித்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் மோதி உடல் 20 மீட்டர் தூரம் இழுத்துச் சென்று போட்டது. இதுகுறித்து என்ஜின் லோகோ பைலட் ரெயில்வே போலீசாரிடம் தகவல் அளித்துவிட்டு சென்றார். ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்