ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வேலூரில் ஓட்டல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-05 17:45 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பொன்மணி (வயது 18). இவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கி வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை அவர் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பொன்மணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்