ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
ஓட்டல் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
மன்னார்குடியை அடுத்த தலையாமங்கலம் பைங்காட்டூர் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது20). இவர் சென்னையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தில் ஆனந்தகுமாரை கைது செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் ஆனந்தகுமார் திருத்துறைப்பூண்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.