ஓட்டல் உரிமையாளர் தற்கொலை

வடமதுரை அருகே கடன் தொல்லையால் ஓட்டல் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-05 16:24 GMT

வடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 47). இவர், அதே பகுதியில் திருச்சி சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். கடந்த சில நாட்களாக கிருஷ்ணமூர்த்தியின் ஓட்டலில் போதிய வருமானம் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணமூர்த்திக்கு கடன் பிரச்சினையும் இருந்து வந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த கிருஷ்ணமூர்த்திக்கு விக்டோரியா என்ற மனைவியும், 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்