மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் மேலாளர் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டல் மேலாளர் பலியானார்.

Update: 2022-07-01 08:27 GMT

திருவள்ளூர் குப்புசாமி நகர் சிவராஜ் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30). இவர் திருவள்ளூரை அடுத்த மணவாள நகரில் உள்ள ஓட்டலில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் ராஜசேகர் வேலை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அவர் திருவள்ளூர் - பூந்தமல்லி சாலையில் ஒண்டிக்குப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது.

இதனால் பதறிப்போன அவர் திடீரென பிரேக் பிடித்தார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையில் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனில்லாமல் ராஜசேகர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்