கள்ள நாட்டுத் துப்பாக்கிகளை ஒப்படைக்க கோரி ஓசூர் கோட்ட வனத்துறையினர் எச்சரிக்கை
கள்ள நாட்டுத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க கோரி கிராம மக்களிடம் ஓசூர் கோட்ட வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் ஓசூர் கோட்ட வனத்துறையினர் பேரணியாக சென்று கள்ள நாட்டுத் துப்பாக்கிகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கள்ள நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருப்போர், அதனை தாங்களாக முன்வந்து ஒப்படைக்கக் கோரி கிராம மக்களிடம் நோட்டீஸ் வழங்கினர்.
அவ்வாறு 10 நாட்களுக்குள் தாங்களாக முன்வந்து ஒப்படைக்காவிட்டால், மோப்ப சக்தி மிக்க நாய்களைக் கொண்டும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தும் கள்ள நாட்டுத் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்படும் என ஓசூர் கோட்ட வனத்துறையினர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எச்சரிக்கை விடுத்தனர்.