கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைசேலம் அரசு ஆஸ்பத்திரியில் 1,000 படுக்கைகள் தயார்

Update: 2022-12-27 19:56 GMT

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

ஒத்திகை நிகழ்ச்சி

கொரோனா தொற்று பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் கூறியதாவது:- சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இதில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 1,000 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

மற்ற படுக்கைகள் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு நாளைக்கு 4,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிய தேவையான வசதி உள்ளன. இதற்காக போதுமான ஆய்வக தொழில் நுட்ப பணியாளர்கள், ஆய்வக உபகரணங்களும் உள்ளன.

ஆக்சிஜன் தேவை

54 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளன. எனவே ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய போதுமான வசதிகள் மருத்துவமனை வளாகத்தில் உள்ளன. மேலும் ஆஸ்பத்திரி வளாகத்தில் டாக்டர், நர்சுகள் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சமூக இடைவெளி, கூட்டம் கூடுவது தவிர்க்க நடவடிக்கை உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்