தோட்டக்கலை பயிர் விதைகள் வழங்கும் முகாம்
சந்தப்படுகை கிராமத்தில் தோட்டக்கலை பயிர் விதைகள் வழங்கும் முகாம் நடந்தது
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சந்தப்படுகை கிராமத்தில் வட்டார தோட்டக்கலை மலைபயிர்கள் துறை சார்பில் தோட்டக்கலை பயிர் விதைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமிற்கு தோட்டக்கலை அலுவலர் அகிலன் தலைமை தாங்கினார். இதில் 100 சதவீத மானியத்தில் புடலை, வெண்டை, கத்திரி, முள்ளங்கி, கீரை, மிளகாய் உள்ளிட்ட விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தோட்டக்கலை அலுவலர் அகிலன் கூறுகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு அனைத்து வகையான சான்று பெற்ற தரமான விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு விதைகளை வாங்கி பயன்பெறலாம் என்றார்.முகாமில் உதவித்தோட்ட கலை அலுவலர்கள் செல்வராஜ் கல்யாணம் மற்றும் விவசாயிகள் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.