மூங்கில் வயலில் தோட்டக்கலைத்துறை அதிகாரி ஆய்வு
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மூங்கில் வயலில் தோட்டக்கலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் தோட்டக்கலை துறை மூலம் தேசிய மூங்கில் இயக்கம் திட்டத்தின் கீழ் பொதுத்துறை ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்ட முள்ளில்லா மூங்கில் சாகுபடி செய்யப்பட்டது. மூங்கில் சாகுபடி செய்யப்பட்ட வயலை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் இளவரசன் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது நிலைய பண்ணை மேலாளர் நக்கீரன் உடனிருந்தார்.