பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வுசெய்து நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்

Update: 2022-05-20 14:53 GMT

வேதாரண்யம்:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் ஆய்வுசெய்து நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்

பூச்சி தாக்குதல்

வேதாரண்யம் தாலுகா செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், கத்தரிப்புலம் வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5000 ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாமரங்கள் பூத்து பிஞ்சு விட தொடங்கி உள்ளன.

இந்த நிலையில் தேன்பூச்சி தாக்குதலால் மா பூக்கள் கருகி வருகின்றன. இதனால் மாங்காய் காய்க்கவில்லை. இந்த ஆண்டு மா விளைச்சல் நன்றாக இருக்கும் என நினைத்த விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தோட்டக்கலை துறையினர் ஆய்வு

போதிய விளைச்சல் இல்லாத நிலையில் சரியான விலையும் கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். மேலும் நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை தோட்டக்கலை துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து நோயை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளிவந்தது.

இதன் எதிரொலியாக வேதாரண்யம் பகுதியில் தேன் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்ட மாமரங்களை வேதாரண்யம் தோட்ட கலை உதவி இயக்குனர் கண்ணன் தோட்ட கலை அலுவலர் வைரவமூர்த்தி, செல்வராஜ், சிக்கல் வேளாண்மை அறிவியல் மைய விஞ்ஞானிகள சந்திரசேகர், ரகு மற்றும் தோட்ட கலை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விவசாயிகளுக்கு ஆலோசனை

பின்னர் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.தேன் பூச்சி நோய் தாக்குதலை கட்டுபடுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 சதவீதம் எதாவது ஒன்றை தெளித்து கட்டுபடுத்தலாம்.டோலபென்னபரேட் 2 மி.லி., ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து பூச்சி தாக்குதலை கட்டுபடுத்தலாம், மருந்து தெளித்து 7 நாட்கள் கழித்து பிறகே மா அறுவடை செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு, தோட்டக்கலை அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்