வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
விருதுநகரில் வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றனர்.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் வசிப்பவர் ராஜி (வயது23). இவரது கணவர் அருண்குமார் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது 5 வயது மகனை பள்ளியில் விட்டு, விட்டு வீடு திரும்பினார். அப்போது ராஜி வீட்டுக்குள் வந்து பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் பீரோவில் இருந்த ரூ.43 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. வீட்டு மாடியில் சென்று பார்த்தபோது மாடி கதவு அருகே உள்ள சுவர் உடைக்கப்பட்டிருந்தது. யாரோ மர்ம நபர் மாடியில் உள்ள சுவரை உடைத்து வீட்டினுள் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து ராஜி கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.