புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி
மன்னார்புரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
இட்டமொழி:
இட்டமொழி அருகே உள்ள மன்னார்புரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவையொட்டி சிறப்பு திருவிழா மாலை ஆராதனை, புனித ஜெபமாலை அன்னையின் தேர்பவனி, பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி, புதுநன்மை, சமபந்தி விருந்து, புனித தேவசகாயம் நாடகம், அன்பியங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜே.எட்வர்டு, அருட்சகோதரிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு, இறைமக்கள் செய்திருந்தனர்.