இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள தினையூரணி புனித சலேத் அன்னை ஆலய திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை யொட்டி ஆர்.சி. பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், நற்கருணை பவனி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சிறப்பு மாலை ஆராதனையுடன் அன்னையின் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் விளையாட்டுப்போட்டிகள், புனித தேவசகாயம் வரலாற்று நாடகம், புனித ஞானப்பிரகாசியார் சபை திருவிழா, ஊர் பொது அசனவிருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.