புனித பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி
வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்பட்டது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 12-ந் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு புனித பாத்திமா அன்னையின் சப்பர பவனி நடைபெற்றது.
பின்னர் வீரபாண்டியன் பட்டணம் பங்குத்தந்தை கிபுராபகரன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. நேற்று காலை வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குருவானவர் ஜான் பிரிட்டோ தலைமையில் ஆடம்பர பெருவிழா கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருப்பலி நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜாண்சன் அடிகளார் தலைமையில் உதவி பங்குத்தந்தை போஸ்கோ, அருட்சகோதரர் சதிஷ் மற்றும் அருட்சகோதரிகள், அன்பிய நிர்வாகிகள் செய்திருந்தனர்.