புனித பரலோக அன்னை தேர்பவனி

பெரியநாயகிபுரம் புனித பரலோக அன்னை தேர்பவனி நடந்தது.

Update: 2023-08-16 18:45 GMT

சாயல்குடி,

சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி பெரியநாயகிபுரம் கிராமத்தில் புனித பரலோக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் திருவிழா கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று நடந்தது. விழாவிற்கு பங்குத்தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை தாங்கினார். பங்குத்தந்தைகள் மற்றும் கிராம நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் பரலோக அன்னை மாதாவிற்கு பக்தர்கள் மெழுகுவர்த்தி, பூ மாலை அளித்தனர். புனித பரலோக அன்னையின் தேர் சென்ற வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்