புனித ஆரோக்கியமாதா ஆலய தேர் பவனி

புனித ஆரோக்கியமாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.

Update: 2023-09-06 19:27 GMT

கல்லக்குடி அருகே வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய ஆண்டுபெருவிழா கடந்த 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. நேற்று மாலையில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வேண்டுதல் சப்பரபவனி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் ஆடம்பர திருப்பலி நிறைவேற்றப்பட்டு, இரவில் ஆரோக்கியமாதா, அன்னம்மாள், சவேரியார், மிக்கேல்சம்மனசு, கபிரியேல்சம்மனசு உள்ள தெய்வங்களின் சப்பர பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி அளவில் அன்னையின் பிறப்பு பெருவிழா திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.மாலை 4 மணிக்கு மாதா சொரூபம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலயபங்குதந்தை தனிஸ்லாஸ், உதவிபங்குதந்தை ஜோசப்இன்பராஜ், திருச்சிலுவை கன்னியர்கள், கிராமபட்டையதார்கள், அன்பியபொறுப்பாளர்கள், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்