புனித அன்னம்மாள் ஆலய திருவிழா

புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நடைபெற்றது.

Update: 2023-08-20 19:00 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்தந்தை ஜோசப் லியோன் தலைமை தாங்கி, கொடியேற்றினார். மேரி இமாகுலேட் பள்ளி முதல்வர் விஜயன், பங்குதந்தை இருதயசாமி முன்னிலை வகித்தனர். தைலாபுரம் பங்குதந்தை ததேயுராஜன் மறையுரை ஆற்றினார். திருவிழாவையொட்டி ஆலயத்தில் தினமும் திருப்பலி, நற்கருணை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

9-ம் திருவிழாவான 26-ந் தேதி காலை 8 மணிக்கு மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் தலைமையில் திருப்பலி, இரவு 7 மணிக்கு நொச்சிக்குளம் ரத்தினராஜ், நாங்குநேரி டென்சிங் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னையின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 27-ந் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலி, புதுநன்மை வழங்குதல், மாலை 3 மணிக்கு அன்னையில் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு மங்களகிரி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ராபின் தலைமையில் நன்றி ஆராதனை, கொடியிறக்கம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை அருட்தந்தை இருதயசாமி தலைமையில் திரு இருதய சபை அருட்சகோதரிகள், நிர்வாக்குழு மற்றும் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்