3½ டன் ரேஷன் அரிசி பதுக்கல்
3½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்பாளையம் புவனேஸ்வரி நகர் பகுதியில் ஒருவர் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்திச்செல்வதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை செய்த போது, மண்ணச்சநல்லூர் அத்தாணி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சிக்கினார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு குடோனில் மூட்டை மூட்டையாக 3,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்தை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த குடோன் உரிமையாளரான காந்திநகரை சேர்ந்த தியாகராஜனை தேடி வருகிறார்கள்.