வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்
கூடலூர் பகுதியில் வீடுகளில் பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கூடலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ேபாலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் கூடலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சில வீடுகளில் கஞ்சாவை பதுக்கி வைத்த சில்லறை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா பதுக்கிய எல்லை தெருவை சேர்ந்த அர்ச்சனா (வயது 34), சுக்காங்கல்பட்டியை சேர்ந்த ஜனாதிபதி (34), மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் (36), கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த அருண் (37), அரசமர தெருவை சேர்ந்த அகிலன் (23), பெருமாள் (27), 18 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.