சிவகாசி,
சிவகாசி கிழக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி மற்றும் போலீசார் மீனம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கட்டிடத்தின் பின்புறம் தகர செட் அமைத்து அதில் சரவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி சரவெடிக்கு சுப்ரீம்கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில் உரிய அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட சரவெடிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த சரவெடிகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சிவகாசி பி.கே.என்.ரோட்டை சேர்ந்த தவமணி மகன் ஜான்எட்வர்ட் (வயது 52) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.