இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்துக்கள் குறித்து தி.மு.க. எம்.பி. ஆ.ராசா அவதூறாக பேசியதாக கூறி அவரை கைது செய்யக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் ஆதிமோகன், சிவா, வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட தலைவர் மகேஷ் கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.