இந்து மக்கள் கட்சியினர் கள் குடிக்கும் போராட்டம்
நெல்லை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கள் குடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
நெல்லை அருகே இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று கள் குடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
பூரண மதுவிலக்கு
நெல்லை அருகே உள்ள தருவை பஸ்நிறுத்தம் பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை ஒன்றிய தலைவர் ஆறுமுககுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மகேஷ், இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வைத்தனர். அகரத் தமிழர் கட்சி தலைவர் குயிலி நாச்சியார், இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கள் குடித்து போராட்டம்
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஓலை பட்டையில் கள் ஊற்றி குடித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் பி.கே.ரவி, மாவட்ட செயலாளர் லட்சுமணன், இளைஞரணி தலைவர் ரமேஷ், நெல்லை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராம், மானூர் மேற்கு ஒன்றிய தலைவர் சுடலை மாரி, 30-வது வார்டு செயலாளர் சுடலை, தச்சநல்லூர் பகுதி இளைஞர்அணி செயலாளர் ஆறுமுகம், அம்பை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராதாகிருஷ்ணன மற்றும் பலர் கலந்து கொண்டனர்.